Skip to main content

Posts

Showing posts from June, 2019

*களைகளைக் கட்டுப்படுத்தும் இயற்கை வழிமுறைகள்*

பயிர்களை நாம் விதைக்கிறோம், களைகளை இயற்கையே விதைத்துக் கொள்கிறது. உண்மையில் களைகள் அந்த இடத்துக்கே சொந்தமானது என்பதால் சாதகமான சூழ்நிலையில் அவை அதிகமாக வளர்ந்து விடுகிறது. பயிர்களுடன் களைகள் வளரும் போது அவை தண்ணீர், ஊட்டம் மற்றும் வளரிடம் போன்றவற்றுக்காக போட்டியிட்டு சாதகமான காலத்தில் சத்துக்கள் அனைத்தையும் களைகளே எடுத்துக் கொண்டு நன்றாக வளர்ந்து விடுகின்றன. ரசாயன விவசாயிகள் களைக்கொல்லிகளை பயன்படுத்தி களைகளை கட்டுப்படுத்தும் போது உணவு நஞ்சாவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படுகிறது. இயற்கை விவசாய முறையில் களைகளை கட்டுப்படுத்த சில எளிய வழிமுறைகள் உள்ளன. பயிர்களின் வளர்ச்சி நிலையில் சில முக்கிய நிலைகளில் களைகள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த நேரத்தில் களைகள் இருந்தால் மகசூல் பாதிக்கப்படும். பயிரின் ஆரம்ப காலகட்டத்தில் களைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. களைகளை கட்டுப்படுத்த வேண்டும் எனில் தொடர்ந்து பயிர்களை கவனித்து அதில் எப்படிப்பட்ட களைகள் தொடர்ந்து வளர்கிறது என்பதை கவனிக்க வேண்டும். *பயிருக்கான இடைவெளி:* சாகுபடி செய்யும் போது பயிர்களின் ...